TNEA COUNSELING – TAMIL NADU ENGINEERING ADMISSION COUNSELING

Management Quota Students Eligible for Education Loan – HIGH COURT

Management Quota Students Eligible for Education Loan – HIGH COURT

Madras Highcourt, Madurai Bech clears as Management Quota Students Eligible for Education Loan.

நிர்வாக ஒதுக்கீட்டு மாணவர்களுக்கும் கல்விக்கடன்: ஐகோர்ட்

மதுரை: “நிர்வாக ஒதுக்கீட்டில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கும், வங்கிகள், கல்விக்கடன் வழங்க வேண்டும்” என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

சிவகாசி, சாட்சியாபுரம் நித்யா என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், €œà®•à¯‹à®µà¯ˆ கற்பகம் பல்கலையில், பி.இ., சிவில் இன்ஜினியரிங் படிக்கிறேன். சிவகாசி, பாங்க் ஆப் இந்தியா கிளையில், 4 லட்சம் ரூபாய் கல்விக்கடன் கோரி விண்ணப்பித்தேன். “நிர்வாக ஒதுக்கீட்டில், பொறியியல் கல்லூரியில் சேர்ந்தவர்களுக்கு, இந்திய வங்கிகள் சங்க வழிகாட்டுதல்படி, கல்விக்கடன் வழங்க முடியாது” என, வங்கி நிர்வாகம் மறுத்தது. கல்விக்கடன் வழங்கக் கோரி, ஐகோர்ட்டில் மனு செய்தேன். மனுவை, வங்கி பரிசீலிக்க, ஐகோர்ட் உத்தரவிட்டது. கடன் வழங்காமல், வங்கி நிர்வாகம் தாமத படுத்துகிறது. கடன் வழங்க உத்தரவிட வேண்டும்€, என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் மாரிமுத்து ஆஜரானார். வங்கி தரப்பில், “நிர்வாக ஒதுக்கீட்டில் கல்விக்கடன் வழங்க முடியாது. மனுதாரர், வேறு திட்டத்தில் கடன் பெற, கூடுதல் சொத்துப் பிணையம் தாக்கல் செய்யவில்லை” என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதியின் உத்தரவில், €à®®à®¤à¯à®¤à®¿à®¯ நிதி அமைச்சர் தலைமையில் 2012 ஆக., 18 ல் நடந்த கூட்டத்தில், பொதுத்துறை வங்கிகளின் தலைமை அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், கல்விக்கடன் வழங்குவது பற்றிய, புது திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. உயர்கல்வியை தொடரும் மாணவர்கள், நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்தாலும், கல்விக்கடன் வழங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்விக்கடன் பெறுவதற்கான தகுதி, நிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளது. மனுதாரர், கல்விக்கடன் பெற தகுதி பெற்றுள்ளார். வங்கி, மனுதாரரின் விண்ணப்பத்தை பரிசீலித்து, கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.€ என உத்தரவிடப்பட்டது.

நன்றி : தினமலர்

Exit mobile version